February 24, 2024

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ் ..!! இவருடைய திடீர் முடிவுக்கு ரஜினி தான் காரணமா ..?? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . குறிப்பாக யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இன்று இந்திய சினிமாவே  திரும்பி பார்க்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . மேலும் இவர் இயக்கிய மாநகரம் ,கைதி ,மாஸ்டர் , விக்ரம் போன்ற நான்கு திரைப்படங்களுமே,

பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தது.  இதை தொடர்ந்து சமீபத்தில் விஜய்யை வைத்து லியோ  என்ற படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தாலும் விமர்சன ரீதியாக கொஞ்சம் அடி வாங்கியது என்று ,

தான் சொல்ல வேண்டும் . இதையடுத்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ் .

இதற்கு  காரணம் என்னவென்றால் , சூப்பர் ஸ்டார் படத்திற்கான கதை எழுதுவதற்காக தானாம் . மேலும் லியோ படத்தில் செய்த தவறை இந்த படத்தில் செய்யக்கூடாது என்பதற்காக தான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் அடிக்கடி அப்டேட் கேட்பார்கள் என்பதற்காகவும் இப்படியொரு முடிவெடுத்துள்ளாராம் . இதனால் இந்த திரைப்படம் கண்டிப்பாக ஒரு தரமான படமாக அமையும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *