April 27, 2024

முன்னணி நடிகர்களை டீலில் விட்டுவிட்டு ..!! பிரபல நடிகைக்கு கதை சொல்லிய நெல்சன் ..!! அடுத்த படம் ஹீரோயின் சப்ஜெக்ட்டா ..?? சரியாக வருமா ..??

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் நெல்சன் . கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்  நெல்சன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் , விஜய்யை வைத்து பீஸ்ட் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார்,

இயக்குனர் நெல்சன் . குறிப்பாக ஜெயிலர் படத்திற்கு பிறகு இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.  இதனால் இப்போதே இவருடைய அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.  அதாவது அடுத்ததாக மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களுடன்,

கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்து நிலையில் டாப் நடிகையுடன் இணைய உள்ளாராம் இயக்குனர் நெல்சன்.  அவர் வேறு யாரும் இல்லை நடிகை நயன்தாரா தான்.  கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கிய முதல் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது ,

நடிகை நயன்தாரா தான்.  இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . இதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு தயாராகி வருகிறாராம் இயக்குனர் நெல்சன்.  இந்தப் படத்தை முடித்த பிறகு தான் பெரிய நடிகர்களின் படங்களை ,

இயக்குனர் நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது . குறிப்பாக ஜெயிலர்  போன்ற பெரிய பட்ஜெட் படத்தை இயக்கிய நெல்சன் மீண்டும் சிறிய பட்ஜெட் படத்தை இயக்கினால் சரியாக வருமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *