September 25, 2023

சொ ந்த தந் தைக் கே செ ய்யாத ஒ ன் றை ..!! சிவா ஜி இற ந்த போ து செ ய்த சூப்ப ர் ஸ்டா ர் ..!! இறப்ப தற்கு முன் பே சிவா ஜிக் கு வாக்கு கொ டுத்த ரஜி னி ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல முன்னணி நடிகர்களுக்கு ஒரு முன்னு தாரணமாக இருந்து வருபவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.  இவர் நடிப்பிற்கே  ஒரு இலக்கணமாக இருந்தவர் என்று கூட சொல்லலாம் . இப்படி பிரபலமான நடிகராக கலக்கிக் கொண்டு வந்த சிவாஜி கணேசனின் கடைசி ஆசையை ரஜினி நிறைவேற்றியதாக ,

ஒரு பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார் . அந்த வகையில் ரஜினியும்,  சிவாஜியும் இணைந்து பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர் . அப்படி கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்து படையப்பா படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் . அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எல்லோருக்கும் ,

முன்னாடியே படப்பிடிப்பிற்கு வந்து விடுவாராம் சிவாஜி.  அப்போது ரஜினியிடம் தான் அதிக நேரம் பேசுவாராம் . அப்படி ஒரு முறை இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி , நான் இறந்துவிட்டால் என்னுடைய உடலுடன் நீ வருவாயா என்று ரஜினியிடம் கேட்டு இருக்கிறார் சிவாஜி.

இதை கேட்ட ரஜினி அதிர்ச்சியாகி ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கேட்டிருக்கிறார் .  அதற்கு சிவாஜி வயசாகி கொண்டே போகிறது,  நீயும் ஊரிலேயே இருக்க மாட்டேங்குற, அதனால் தான் இப்படி கேட்டேன் என்று கூறியிருக்கிறார் . அதற்கு ரஜினி நான் கண்டிப்பாக வருவேன் ,

என்று சொல்லி இருக்கிறார் . அப்படி சொன்னது போலவே சிவாஜி இறந்த போது அடக்கம் செய்யும் வரை கூடவே இருந்தாராம் ரஜினி. ஆனால் ரஜினி அவருடைய அப்பாவுக்கு கூட இதை செய்தது  கிடையாதாம்,ஆனால்  சிவாஜியின் ஒரு வார்த்தைக்காக செய்ததாக கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *