சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு , பகத் பாசில் , கீர்த்தி சுரேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் .
குறிப்பாக இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்படி இந்த படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்திருந்தவர் தான் நடிகை கீதா கைலாசம். இவர் வேறு யாருமில்லை இயக்குனர் கே பாலச்சந்தரின் மருமகள் தான் . இவர் ஏற்கனவே ,
சார் பட்டா பரம்பரை , வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் பாலச்சந்தரின் குடும்பத்தில் இருந்து வந்தவரா.? அதனால்தான் நடிப்பில் பிச்சு ஒதறுகிறார் என்று கூறி வருகின்றனர்…