தற்போது தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு அதிக ரசிகர் பட்டாளத்தோடு இருந்து வருபவர் நடிகர் விஜய் . அப்படி இதுவரை தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வந்த விஜய் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை ,
நேரில் சந்தித்து அவர்களுக்கு சான்றிதழும் , பரிசும் வழங்கியிருந்தார். அப்படி விஜய் செய்த இந்த செயலை பலரும் பாராட்டித்தள்ளினார்கள் . மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் இப்படி எல்லாம் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் அஜித் மீண்டும் அதை செய்தால் விஜய் யை விட அஜித்துக்கு தான் அதிக ரசிகர் பட்டாளம் இருக்கும் என்று கூறியுள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி . அந்த வகையில் விஜய்யை போல அஜித்துக்கும் அப்போது மிகப்பெரிய ரசிகர் மன்றம் இருந்தது.
அதன் மூலம் பல நல்ல விஷயங்களையும் , உதவிகளையும் செய்து இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் தனக்காக நேரத்தை வீணாக்குவதாக நினைத்த அஜித் இனி எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் , உங்களுடைய குடும்பத்தை பாருங்கள் என்று முடிவெடுத்து ரசிகர் மன்றத்தையே,
கலைத்தார் . அப்படி இருந்தும் அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் அஜித் மீண்டும் ரசிகர் மன்றத்தை தொடங்கினால் விஜய்க்கு வந்ததை விட இரண்டு மடங்கு ரசிகர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது…