எனக்கு அவர் ப்ரெண்ட் மட்டும் தான்..!! நடிகர் ஜெய்யுடன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை வாணி போஜன்..?? அப்போ உண்மையான காதலன் இவரு இல்லையா ..??
வாணி போஜன் என்பவர் ஒரு தமிழ் வடிவழகி மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக இருந்து தெய்வமகள் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.
இந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பு மூலம் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதன்பின் ஜெய்யுடன் இரு படங்களில் நடித்து வந்த வாணி போஜன், அவருடன் ரகசிய காதலில் இருப்பதாகவும்,
வாணி போஜன் கதையை அவர் தான் தேர்வு செய்கிறார் என்றும் கூறப்பட்டது. இது குறித்து வாணி போஜன் பல இடங்களில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சமீபத்தில் ஜெய் பற்றிய கேள்விக்கு பதிலளித்த வாணி போஜன், ஜெய்யை ரொம்ப நாளாக தெரியும்
என்று ராஜா ராணி படத்தில் அவரது நடிப்பு பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ஜெய் நேரத்திற்கு வரமாட்டார் என்று கூறுவதெல்லம் பொய், சீக்கிரம் வந்துவிடுவார் நல்ல பையன்ங்க பாவம் என்றும் அவர் எனக்கு ப்ரெண்ட் தான் என்றும் தெரிவித்துள்ளார்.