புன்னகையரசி சினேகா திருமண புகைப்படமா இது இவளோ திரை நட்சத்திரங்கள் வந்துருக்காங்களா ..!! இதுவரை வெளியிடாத வைரல் புகைப்படங்கள்..!!
சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
2 001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பிரசன்னா வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.
பிரசன்னாவின் பிறப்பிடம் திருச்சிராப்பள்ளியாகும். இவரின் தந்தை பெல் நிறுவனத்தில் வேலை செய்தார். மே 11, 2012 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையான சினேகாவைத் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார்.
பின்னர் , பிரசன்னா சினேகா வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார்.
2015 ஆகஸ்ட் 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது . அக்குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள். இந்நிலையில் கடந்த மாதம் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது 2-வது குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.