இளையராஜா அளவுக்கு வந்திருக்க வேண்டிய இசையமைப்பாளர் ..!! உள்ளமே உனக்குத்தான் என்ற பாடலுக்கு மெட்டு போட்டவரும் இவர் தான் ..!! ஹிட் பாடல்கள் கொடுத்தும் ..?? சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போனது தான் சோகம்..!! புகைப்படம் உள்ளே ..!!
இப்போது எத்தனையோ இசையமைப்பாளர்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் பல தலைமுறைகளாக தன் இசையால் அனைவரையும் கட்டி போட்டவர் என்றால் அது இளையராஜா மட்டும் தான். இவருடைய பாடல்கள் காலம் கடந்த பின்னும் நினைவில் நிற்கும். அதனாலேயே அவர் இசைஞானி என்று கொண்டாடப்பட்டு வருகிறார். இவரைப் போலவே ஒரு இசையமைப்பாளர்
தன் முதல் படத்திலேயே தன் திறமையை நிரூபித்து அனைவரையும் வியக்க வைத்தார். இன்னும் சொல்லப்போனால் இவருடைய பாடல்களுக்காகவே ஹிட்டடித்த திரைப்படங்களும் உண்டு. இவ்வாறு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இவர் பெரிய அளவில் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனது தான் சோகம்.
கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சேரன் பாண்டியன் திரைப்படம் தான் இவருக்கான அடையாளமாக இப்போதும் இருக்கிறது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் சௌந்தர்யன். முதல் படத்திலேயே இளையராஜா அளவுக்கு அற்புதமான பாடல்களை கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு.
அப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் இப்போதும் பலரின் விருப்ப பாடல்களாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான ஆத்தாடி என்ன உடம்பு என்ற பாடலுக்கு மெட்டு போட்டவரும் இவர் தான். இதே பாடலை விஜய் டிவியில் ராமர் பாடி ட்ரெண்டாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்தாளம் கொட்டுதடி மனசு, உள்ளமே உனக்குத்தான் போன்ற பாடல்களுக்கும் இவர்தான் இசையமைத்திருக்கிறார். இப்படி 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக இருந்த பல பாடல்களும் இவரால் உருவாக்கப்பட்டது தான். ஆனால் இவர்தான் அந்த இசையமைப்பாளர் என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
ஒரு சிலர் அதெல்லாம் இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்று கூட நினைத்ததுண்டு. இப்படி இசைஞானி அளவுக்கு வந்திருக்க வேண்டிய இந்த இசையமைப்பாளர் இப்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். திறமை இருந்தும், ஹிட் பாடல்களை கொடுத்தும் இவரால் வளர முடியாமல் போனதற்கான காரணம் தான் பெரும் புதிராக இருக்கிறது.