April 20, 2024

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதல் முறையாக இணையும் இந்த காமெடி நடிகரா..?? காமெடிலையே மிரட்டும் இந்த நடிகரா..?? வேற லெவல் பண்ணுவாரே..?? ரஜினி கூட இந்த படத்துலயா ..??

தமிழ் திரையுலகில் தற்பொழுது நிறைய திரைப்படங்களை பெண்கள் இயக்கி வருகிறார்கள் என்று கூட கூறலாம் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் தான் லால் சலாம் இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,விஷ்ணு விஷால் போன்ற நடிகர்கள் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருக்கிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருவதால் ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்த உடனே லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். மேலும் இந்த திரைப்படத்திற்காக

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க இருக்கிறாராம் .கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது செஞ்சியில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த லால் சலாம் திரைப்படத்தில் புதிதாக ஒரு காமெடி நடிகர் இணைய இருக்கிறார் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

அதாவது இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்கு ஒரு காமெடி நடிகர் வேண்டுமென முடிவு செய்து பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையா அவர்களை இந்தத் திரைப்படத்தில் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் ரஜினியுடன் இவர் நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தம்பி ராமையா ரஜினியுடன் இணைந்து நடித்தால் மிகவும் புகழ்பெற்று விளங்குவது மட்டுமல்லாமல் பலரும் இவரை பாராட்டுவார்கள் இவரது நடிப்பு இயல்பாகவே இருப்பதால் இவரது நடிப்பு திறமையை லால் சலாம் திரைப்படத்திலும் காட்ட வருகிறார் என்பது மட்டும் எங்களுக்கு புரிகிறது என கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *