தற்கொலை செய்ய முயன்ற பிரபல நடிகை ரம்யா..?? இவரை நினைத்து தான் இந்த முடிவு எடுத்தாரா ..?? தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வு அது பேட்டியில் கூறிய அதிர்ச்சி தகவல் ..??
திவ்யா ஸ்பந்தனா மக்களால் அறியப்படும் ரம்யா, இவர் வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர், இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவரின் தங்கை கீர்த்தனா தேவி என்றழைக்கப்படும் சஹானா இப்போது திரைத் துறையில் கால் பதித்துள்ளார்.
கன்னடத் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு முதலிய மொழிகளிலும் நடித்துள்ளார். திவ்யா தனது பள்ளிப்படிப்பை ஜெயின்ட் ஹில்டா( ஊட்டி), மற்றும் சேக்ர்ட் ஹர்ட் பள்ளி (சர்ச் பார்க்) ( சென்னை) யிலும் முடித்தார். பட்டப்படிப்பை பெங்களுரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் துவங்கி பாதியில் கைவிட்டார்.
2004-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா. இதையடுத்து சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபல நடிகையாக மாறினார். இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ” நான் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றி கொண்டிருக்கும் போது என்னுடைய அப்பா மரணமடைந்தார்.
அந்த நேரத்தில் நான் அவரோடு இல்லை. இதை நினைத்து நான் மிகவும் வருந்தினேன். தற்கொலை செய்ய கூட முயன்றேன். அந்த நேரத்தில் ராகுல் காந்தி எனக்கு ஆறுதல் மற்றும் தைரியம் கொடுத்தார் என்று ரம்யா கூறியுள்ளார்.