தென்னிந்திய சினிமாவே பரவால ..?? ஹிந்தி சினிமாவில் வெறும் அந்த மாதிரியான காட்சிகள் மட்டும் நடிக்க சொல்லறாங்க ..?? ரொம்ப மோசம் உண்மையை பேட்டியில் உடைத்த காஜல் அகர்வால் ..!!
காஜல் அகர்வால் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர் லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.
இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு , பிருந்தாவனம் , மிட்டர். பெருபெட்டு , பிசினசு மேன் , ஜில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் காஜல் அகர்வால் பாலிவுட் சினிமாவை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், ” நான் விரும்பும் சுற்றுச்சூழல், நெறிமுறைகள், ஒழுக்கம் ஆகியவற்றை தென்னிந்திய சினிமாவில் இருக்கிறது. ஆனால் இந்த விஷயம் ஹிந்தி சினிமாவில் இல்லை” என்று கூறியுள்ளார்.