கேஜிஎஃப், காந்தாரா அளவிற்கு ஓவர் பில்டப் கொடுத்தது தப்பா போச்சு ..?? தயாரிப்பாளரை நடுத்தெருவில் நிற்க வைத்து ..?? பாதிக்கு பாதி நஷ்டம் போஸ்டர் ஒட்டுன காசு கூட எடுக்க முடியாமல் திணறியது ..!! ஸ்ரேயா நடிக்கும் ஓடலயா ..!!
கன்னட சினிமாவை, உலகமே திரும்பி பார்க்க வைத்த கேஜிஎப், காந்தாரா படங்கள் மிகப்பெரிய பிரம்மாண்ட வசூல் பெற்றனர். இதை மனதில் வைத்து கன்னட சினிமாக்கள் அடுத்தடுத்து பெரிய பிரமாண்ட படங்களை தயாரித்து வந்தனர். தற்போது வெளிவந்துள்ள கப்சா படத்தை, ‘கேஜிஎஃப் மாதிரியே நாங்களும் 120 கோடி பட்ஜெட்டில் எடுப்போம், வெற்றி பெறுவோம்!’ என்று நினைத்து எடுத்தனர்.
இந்த படம் பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டது. இந்த படத்தின் மூலம் 60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது போட்ட காச கூட எடுக்கல. பாதிக்கு பாதி நஷ்டம் ஏற்பட்டதால் அந்த படத்தின் தயாரிப்பாளர் இப்போது விரக்தியில் உ ள்ளார். இதனால் இந்த கப்சா படத்தின் மூலம் கன்னட தயாரிப்பாளர்களால் இனிமேல் 100 கோடிக்கு
படங்கள் எடுக்க முடியாது, எடுக்க மாட்டோம்! என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் ஸ்ரேயா இணைந்து நடித்த கப்சா திரைப்படம், டைட்டிலுக்கு ஏற்ப கேஜிஎஃப் படத்தின் கப்சாவாகவே இருந்தது. ஓவர் வைலன்ஸ் உடம்புக்கு ஆகாது.
அப்படித்தான் இந்த படத்தில் அளவுக்கு மிஞ்சிய சண்டை காட்சிகள் இடம் பெற்றதால், திரையரங்கில் படத்தை பார்த்தவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது.‘ என்ன இருந்தாலும் கேஜிஎஃப், கேஜிஎஃப் தான்’ என்று இந் த படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்தது. மேலும் பான் இந்தியா படமாக
வெளியான இந்த படம் எல்லா ஸ்டேட்டிலும் அடி மேல் அடிவாங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்தது . அதிலும் தமிழகத்தில் லைக்கா நிறுவனம் கப்சா படத்தை விநியோகம் செய்யும் உரிமையை 4 கோடி கொட்டிக் கொடுத்து வாங்கியது. ஆனால் போஸ்டர் ஒட்டுன காசு கூட எடுக்க முடியாமல் திணறியது.
மொத்தமாகவே சில லட்சங்கள் மட்டுமே லைக்கா நிறுவனத்திற்கு கிடைத்ததாம். இதற்கு முன்பு கேஜிஎஃப், காந்தாரா மூலம் கன்னட படத்தின் மீதான இமேஜ் வேற லெவலுக்கு இருந்தது. ஆனால் கப்சா அதை சுக்கு நூறாக உடைத்து விட்டது.