அந்த மாதிரியான வார்த்தைகளை கேட்கும் போது வேதனையா இருக்கும்..?? கிசுகிசுக்களுக்கு வாணி போஜன் உருக்கமாக பதிவினை கொடுத்து ரசிகர்களை சோகத்தில் முழுக வைத்துள்ளார் ..!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் நடிகை வாணி போஜன். இவர் 2020 -ம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ” ஓ மை கடவுளே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்திருந்தார். தற்போது வாணி போஜன் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் ஒர் இரவு என்னும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தினார். அதனை தொடர்ந்து சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவருக்குஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
அதன் பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கைவசம் வைத்திருக்கிறார். குறிப்பாக 2023 – ல் மட்டும் பத்து படங்களுக்கு மேல் இருக்கிறது. இப்படி ஓடும் வாணி போஜன் அவ்வபொழுது கிசுகிசுகளும் சிக்குவது வழக்கம்.
ஆனால் அதற்கு எல்லாம் எதுவும் பதில் கொடுக்காமல் மௌனமாக திரை உலகில் ஓடிக்கொண்டிருக்கிறார்ச மீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வாணி போஜன், ” நான் சினிமாவிற்கு வந்த போது,
இவுங்க சீரியல் நடிகை தானே எப்படி சினிமாவில் படம் பண்ண முடியும் என்று காது பட பேசுவார்கள். அது எ னக்கு கஷ்டமாக இருக்கும் என வாணி போஜன் உருக்கமாக கூறியுள்ளார்.