பிரகாஷ் ராஜின் ஒட்டுமொத்த சொத்து எவளோ தெரியுமா ..?? அடேங்கப்பா இத்தனை கோடியா ..!! இந்த ஒரு படத்திற்கு மட்டும் இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா..!! பிரகாஷ்ராஜ் நடிப்புக்கு அளவே இல்ல அதும் இந்த படத்தில் சொல்லவே வேணா ..!!
தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதில் கனகச்சிதமாக நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். இவருடைய ஒட்டு மொத்த சொத்து விபரம் என்ன என்பதும், அவர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் .
என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. பெங்களூரை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜ் சினிமாவில் முதல் முதலாக கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான டூயட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது.
அதிலும் இவர் வசந்த் இயக்கிய ஆசை படத்தில் அட்டகாசமாக நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பர். அதேபோல் அப்பு படத்தில் திருநங்கையாகவும் மிரட்டி இருப்பார். அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் மிரட்டும் வில்லனாக வலம் வந்தார்.
அதன்பின் அரசியலிலும் ஆர்வம் காட்டிய பிரகாஷ் ராஜ், தற்போது வரை சினிமாவிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரகாஷ் ராஜ், மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழ ர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாகத்தில் குறைவான நேரத்திலேயே வந்ததால், இரண்டாம் பாகத்தில் அதிக சீன்களில் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரகாஷ் ராஜின் பிறந்த நாளான இன்று அவரை குறித்த பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் உலாவி வருகிறது.
அதிலும் 58 வயதான பிரகாஷ் ராஜ் 40 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருக்கிறாராம். இவர் ஒரு படத்திற்காக 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டாப் நடிகர்களுக்கு இணையாக கோடிக்கணக்கில் பிரகாஷ் ராஜ் சம்பளம் வாங்குவது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.