ஐஸ்வர்யாவின் நகைகளை மீட்ட போலீஸ் ..!! நகையை திருடியது அவங்க வீட்டில் இருகவங்களே தானா..!! 60 சவரனுக்கு பதில் 100 சவரனை கண்டுபிடித்து..!! தனுஷ் வீட்டில் இருக்கு நகையும் திருடி இருக்கலாம் என ஐஸ்வர்யா சந்தேகத்தில் கேக்கும் போலீஸ் ..??

0

சூப்பர் ஸ்டார்   ரஜினியின்   மகளும்,   இயக்குனருமான   ஐஸ்வர்யா   ரஜினிகாந்த்   தன்னுடைய வீட்டில்   60   சவரன்   நகை  திருடு   போனதாக   தேனாம்பேட்டை   காவல்   நிலையத்தில்   புகார் அளித்திருந்தார்.   புகாரின்   அடிப்படையில்   விசாரணை   நடத்திய   காவல்துறை   60 சவரனுக்கு பதில் 100   சவரனை  மீட்டுள்ளனர்.  இதனால்   தற்போது   ஐஸ்வர்யா   ரஜினிகாந்தின்   மீது போலீஸ்  விசாரணையை   திருப்பி   உள்ளது.

கடந்த   பிப்ரவரி  10 ஆம்   தேதி   ஐஸ்வர்யா ரஜினிகாந்த்   லாக்கரை   திறந்து   பார்த்த  போது,   அதில்   வைத்திருந்த   நகை   இல்லாதது தெரிந்ததும்   போலீசில்   புகார்  அளித்தார்.   ஆனால்   லாக்கர்   உடைக்கப்படவில்லை.  மூடி வைத்தது   அப்படியே   இருந்ததால்,   லாக்கரில்   நகை   இருப்பது   தெரிந்த   நபர்கள்   தான்

திருடி   இருக்க   வேண்டும்.   ஆகையால்   இது   பற்றி   தெரிந்த   வீட்டுப்   பணியாளர்கள்   மூன்று பேரை   புகாரில்   குறிப்பிட்டிருந்தார்.   அவர்   சந்தேகப்பட்டது   போல்   ஐஸ்வர்யா   ரஜினிகாந்த் வீட்டில்   4 வருடங்களாக   வேலை   செய்த   ஈஸ்வரி   என்பவர்   தான்   நகைகளை   திருடி இருக்கிறார்.

இவருடைய   வங்கி   கணக்குகளை   ஆராய்ந்த   போலீஸ்,    லட்சக்கணக்கில் பணம்பரிமாற்றம்   நடந்தது   தெரியவந்துள்ளது.   அவரை  விசாரித்த   போது   திருடிய நகைகளை   விற்று   ஒரு   கோடிக்கு   சோழிங்கநல்லூரில்   வீடு   வாங்கியது   தெரிய   வந்தது. இதை   ஐஸ்வர்யா   ரஜினிகாந்த்

வீட்டில்   வேலை   செய்த   டிரைவரின்   உதவியுடன் செய்திருக்கிறார்.  மேலும்   60   பவுன்   திருடியதாக   புகார்   அளித்த   நிலையில்   100 பவுன் கிடைத்ததால்  ஐஸ்வர்யா   ரஜினிகாந்த்   வீட்டில்   மட்டுமல்ல   ரஜினிகாந்த்,   தனுஷ்   வீட்டிலும் ஈஸ்வரி   தன்னுடைய   கைவரிசையை   காட்டி   இருப்பார்   என சந்தேகிக்கப்படுகிறது.

ஏனென்றால்   அவர்களது   வீட்டிற்கும்   வேலை   செய்வதற்காக   அடிக்கடி   சென்று   வருவாராம். ஆகையால்  அங்கேயும்   நகை திருடு   போய்   இருக்கலாம்   என   விசாரணையை  தீவிரப்படுத்தி உள்ளனர்.   இதுகுறித்து   ஐஸ்வர்யா  ரஜினிகாந்த்திடமும்   போலீஸ்   விசாரணையை   நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.