தன் மனைவியை மூன்றாம் திருமணம் செய்ய சொன்ன முன்னாள் கணவர்..?? அவரே வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் ..?? திருமண வாழ்த்தை கூறிய வைரல் வீடியோ உள்ளே ..!!
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் “ரேஷ்மா பசுபுலேட்டி”. இப்படத்தில் இவர் நடித்திருந்த புஷ்பா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
ரேஷ்மா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சின்னதிரை சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக வலம் வருகிறார்.
சமீபத்தில் ரேஷ்மா தன் மகனுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது ரேஷ்மாவின் இரண்டாவது (முன்னாள்) கணவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், என்னுடைய மகனின் வளர்ச்சியை பார்த்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
ரேஷ்மா எப்போதும் பெரிய திரையில் வர தான் ஆசைப்பட்டார். தற்போது அது நடந்துள்ளதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. நல்ல குணங்கள் உள்ளவரை பார்த்து திருமணம் செய்து கொண்டு அவருடன் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று ரேஷ்மாவிடம் கூறியுள்ளார். இதோ அந்த முழு வீடியோ.