அட்ஜஸ்ட்மென்ட் தொல்லையை வெளிப்படையாக போட்டு உடைத்த 5 நடிகைகள்..?? அட பாவிங்களா இந்த நடிகையும் விட்டு வைக்கலயா..?? இந்த நடிகர்களால் ஹீரோயின் அனுபவித்த டார்ச்சர்கள் ..?? ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..??
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை பற்றி அவர்கள் தைரியமாக வெளியில் சொல்ல கடந்த 2006 இல் ட்விட்டரில் மீ டூ என்னும் ஹேஷ்டேக்கை தொடங்கி உலகில் உள்ள நிறைய பெண்களை தங்களுக்கு எதிராக நடந்த பிரச்சினைகளை பற்றி பேச வைத்தனர். அப்போது எல்லா துறைகளும் போலவே சினிமா துறையிலும் நடந்த இந்த மாதிரி பிரச்சினைகளை நடிகைகள் ரொம்பவும் தைரியமாக வெளியில் பேசினர். அதில் தமிழ் நடிகைகளும் உண்டு.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி ந டிகராக இருக்கும் சரத்குமாரின் மகளாக இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கும் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது என்பதை அவர் சொன்ன போது ஒட்டு மொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் தான் உறைந்து போனது. மீ டூ புகார் வருவதற்கு முன்னரே தயாரிப்பாளர் ஒருவர் கேஸ்டிங்காக அட்ஜஸ்ட்மென்ட்க்கு அ ழைத்ததாக வரலட்சுமி கூறியிருந்தார்.
காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா. இவர் தன்னுடைய பள்ளி பருவத்தின் போது ஆட்டோவில் மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர், யாராவது ஒருவரை முன் சீட்டில் அமர சொல்லுவாராம். அப்படி சுனைனா அமரும் பொழுது அவரிடம் சில்மிஷம் செய்வாராம். இதை அவர் இந்த புகாரின் போது சொல்லியிருந்தார்.
நடிகை பாவனா தன்னை காரில் ஒரு மர்ம கும்பல் கடத்தி வன்கொடுமை செய்ததாக போலீசை புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த போது அதில் சிக்கியவர் பிரபல மலையாள நடிகர் திலீப் குமார். தமிழில் அசுரன், துணிவு போன்ற படங்களின் நடித்த நடிகை மஞ்சு வாரியரின் முன்னாள் கணவர் தான் இந்த இவர். பாவனா -திலீப் குமார் வழக்கு இன்று வரை நடந்து வருகிறது.
பின்னணி பாடகி ஆகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருப்பவர்தான் சின்மயி. இவர் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் சின்மயி பல பின் விளைவுகளையும் சந்தித்தார் என்று தான் சொல்ல வேண்டும். பல மிரட்டல்கள், எதிர்ப்புகளை தாண்டியும் இன்றுவரை சின்மயி இதைப்பற்றி ரொம்பவும் தைரியமாக பேசி வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் ரெஜினா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் சில வருடங்களுக்கு முன்பு தன் தோழிகளுடன் படம் பார்க்க சென்றிருந்தபோது இதுபோன்ற பிரச்சனை தனக்கு நடந்ததாகவும், அப்போது தனக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை என்றும் இப்போது அது போல் நடக்க விடமாட்டேன் எ ன்றும் சொல்லியிருந்தார்.