11 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான சூப்பர் ஸ்டார் சிரங்ன்சீவி மகன் ராம் சரணின் மனைவி..?? யாருன்னு தெரியுமா..?? இவரோட மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா..??
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் மெகா சூப்பர் ஸ்டார் சிரங்ன்சீவி அவர்களின் மகனாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகர் ராம் சரண். சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து அதற்கான ஆஸ்கர் விருதினை இசையமைப்பாளர் பெற்றதை தற்போது கொண்டாடி வருகிறார் ராம் சரண்.
கடந்த 2012ல் உபாசனா காமினேனியை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். 11 ஆண்டுகளுக்கு பின் ராம் சரணின் மனைவி உபாசனா கர்ப்பமாகியிருக்கிறார். இந்நிலையில் நடிகர் ராம் சரணின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகி யிருக்கிறது.
ராம் சரண் ஒரு படத்திற்காக தற்போது 45 கோடி சம்பளமாக பெற்று இதுவரை 1370 கோடி அளவில் சொத்தாக சேர்த்துள்ளாராம். மேலும் ராம் சரணின் மனைவி ஒரு தொழிலதிபர் என்பதால் அவரின் வருமானமும் சேர்த்து கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாயாக இருக்கலாம்
என்றும் கூறப்படுகிறது. 35 கோடியில் ஹைதராபாத்தில் பங்களா, தனிப்பட்ட ஜெட் விமானம் மற்றும் விலையுயர்ந்த கார் , பைக் என்று சேர்த்து வைத்துள்ளாராம். மேலும், பெப்சி, டாடா டொகோமோ, ப்ரூட்டி, மோட்டோக்ரோப் உள்ளிட்ட 35 விதமான
பிராண்ட்களுக்கு அம்பேஸ்டராக தலா 1.8 கோடி அளவில் சம்பளமாக பெற்று வருகிறாராம். தற்போது சங்கர் படத்தில் நடித்து வரும் ராம் சரண் கிட்டத்தட்ட 100 கோடி சம்பளமாக உயர்த்தி பெயவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.