முதல் முதலாக சூப்பர் ஸ்டார், கேப்டன், சத்யராஜ் இணைந்தது இந்த படம் தான்..?? இந்த படத்தில் கதாநாயகி தான் ஹீரோவே ..?? அந்த பிரபல ஹீரோயின் யாருன்னு தெரியுமா ..??
80, 90களில் உச்சத்தில் இருந்த நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பிரபு இவர்கள் கூட்டணியில் நிறைய படம் பார்த்திருப்போம். ஆனால் விஜயகாந்த் இவர்களுடன் இணைந்து நடித்தது கிடையாது. அவர் எ ப்போதுமே தனிக்காட்டு ராஜாவாகவே படங்களில் மிரட்டிக் கொண்டிருந்தார். ஒரு காலத்தில் விஜயகாந்த் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தும் அதை மறுத்துவிட்டார்.
அதேபோல் நிறைய நடிகர்களுடன் கூட்டணி வைத்து அவர் நடிப்பதையும் தவிர்த்து வந்தார். ர சிகர்கள் சூப்பர் ஸ்டார், சத்யராஜ், கேப்டன் ஆகிய மூவரையும் ஒரே படத்தில் பார்க்க வெகு நாட்களாக ஆசைப்பட்டனர். எந்த விஷயத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என இயக்குனரான கே பாலச்சந்தர் கையில் எடுத்தார்.
இதனால் அவருடைய அரிய படைப்பான ‘ மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சிகள் மட்டும் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் உடன் விஜயகாந்த் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கதாநாயகி தான் ஹீரோவே.
1987 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சுகாசினி கிட்டத் தட்ட ஹீரோயின் இல்லை, ஹீரோவாகவே நடித்திருப்பார். இவருடன் ஸ்ரீதர், எஸ் பி பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் மூவரும் அதாவது ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த்
சேர்ந்து நடித்திருப்பார்கள். இந்த பாடலை இப்போது வரை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் ஏனென்றால் இவர்கள் மூவரும் இணைந்து நடித்த காட்சியை இந்த பாடலில் மட்டுமே பார்க்க முடியும். அதிலும் இதுதான் பாலச்சந்தர் உடன் விஜயகாந்த் இணைந்த ஒரே ஒரு படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.