தியேட்டரில் ரிலீஸ் செஞ்சிருக்கலாம் ரசிகர்களை ஏங்க வைத்த படங்கள் ..!! 2 வது ரிலீஸ் தயாரான ஆர்யாவின் படம் ..?? ஓடிடிலையே பெத்த லாபம் பார்த்த சூர்யா ..!!
சினிமாவை பொறுத்த வரையிலும் நடிகர்கள் தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளனர் ஒரு சில காரணங்களால் திரையரங்குகளில் வெளியிடாமல் பட குழு ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட்டு பெத்த லாபத்தையும் பார்த்து வந்தனர். ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டைன் மென்ட் தயாரிப்பில் சூர்யா, ரஜிஷா விஜயன் , லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் இருளர் இனத்தைப் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும்.
கடாவர் 2022 ஆம் ஆண்டு அனூப் பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் டிஸ்னி ப்ளட்ஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கலாம் என்று ஏங்க வைத்த படங்களில் ஒன்றாகவும் அமைந்தது
லிஃப்ட் 2021 ஆம் ஆண்டு வி வினித் வரபிரசாந்த் இயக்கத்தின் கவின், அமிர்தா ஐயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கில் இசையமை த்துள்ளார். மேலும் இப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகி விமர்சகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று நடிகர்களின் பாராட்டையும் பெற்றது.
டானாகாரன் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடிப்பில் காவலர் பயிற்சி கல்லூரியில் நடக்கும் அதிகார அத்துமீறல்களை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களை பெற்ற மாபெரும் வெற்றி பெற்றது.
சார்பட்டா பரம்பரை குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து ஆர்யா, பசுபதி, அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் ஆர்யா வித்யாசமான தோற்றத்தில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கலாம் என ரசிகர்களையே ஏங்க வைத்த படமாக அமைந்தது.