ஈ, காக்கா கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட பிரபல நடிகரின் படம்..!! இந்த நடிகையின் படத்தையும் சேர்த்து 3 படம் ..?? இரண்டே பேர் தான் வந்தாங்களா..?? இந்த படமா..!! அட கடவுளே ..!!
பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே பல படங்கள் திரையரங்கு மற்றும் ஒடிடியில் வெளியாகும். அதுவும் நேற்று பிரபுதேவாவின் பஹீரா, ரித்திகா சிங்கின் இன் கார், அட்டகத்தி தினேஷின் பல்லு படாம பாத்துக்க மற்றும் சில படங்களும் வெளியாகி இருந்தது. ஆனால் எல்லா படமும் கலமையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.
மேலும் குறிப்பாக டைட்டில் வைத்து படம் கொள்ளை லாபம் பார்க்கலாம் என்று எண்ணிய தயாரிப்பாளரின் நினைப்பில் மண்ணள்ளி போட்டுள்ளது ஒரு படம். ஏனென்றால் திரையரங்குகளில் வெறும் ரெண்டு பேரு தான் படம் பார்க்க வந்தாங்களாம். அந்த அளவுக்கு தியேட்டர் காற்று வாங்கி உள்ளது.
அதாவது யூடியூப் சேனலில் டெம்பிள் மங்கீஸ் என்ற சேனலை நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய் வரதராஜ். இவர் பல்லு படாம பார்த்துக்க என்று பல வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தை இயக்கத் தொடங்கினார். இந்த படத்தின் டைட்டிலே மோசமாக உள்ளதால் அப்போதே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தது.
இந்நிலையில் நேற்று திரையரங்குகளில் பல்லு படாம பாத்துக்க படம் ரிலீஸானது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் முன்னதாக வெளியான ஜாம்பி படத்தின் தழுவலாக தான் இந்த கதையும் எடுக்கப்பட்டிருந்தது.
மேலும் அடல்ட் மூவியாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முழுக்க முழுக்க டபுள் மீனிங் வசனங்களாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். மேலும் விஜய் வரதராஜ் படங்களை எடுக்க லாய்க்கு இல்லை என்றும் யூடியூப் சேனலை போதும் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
பல்லு படாம பாத்துக்க முதல் நாள் ஷோவிலையே ஈ, காக்கா கூட இல்லாத நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பட ம் எப்படி ஓடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விரைவில் தியேட்டரில் இருந்து இந்த படத்தை தூக்கி விடுவார்கள். மேலும் இந்த படம் மூலம் தயாரிப்பாளருக்கு பொருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.