நான் நடிச்ச படம் ஒன்னு கூட ஓடல..?? இந்த படமும் ஊத்திக்கிச்சு..?? இவங்க கொடுத்த டாக்டர் பட்டமும் போலியா..?? கதறி அழுத வடிவேலு ..??
வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி இப்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் கடைசியாக வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் போட்ட வசூலை கூட எடுக்க முடியாமல் திணறியது. இப்போது சந்திரமுகி 2 , மாமனிதன் போன்ற படங்களை வடிவேலு கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் வடிவேலுவை சில காலமாக கெட்ட நேரம் பிடித்து ஆட்டுகிறது. அதாவது ஒரு காலத்தில் வடிவேலு என்ற பெயருக்கு ஒரு மார்க்கெட் இருந்தது. இப்போது வடிவேலு இல்லாத இடைப்பட்ட காலங்களில் நிறைய காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் வந்து விட்டனர். இதனால் வடிவேலுவின் பழைய காமெடிகள் ரசிகர்களை கவருமா என்ற
சந்தேகம் எழுந்துள்ளது. அதன் விளைவாக தான் நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. இப்படி இருக்கையில் சமீபத்தில் வடிவேலு, இசையமை ப்பாளர் தேவா போன்றோருக்கு அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் அந்த டாக்டர் பட்டம் போலி என அண்ணா
பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது யாரோ மர்ம ஆசாமிகள், ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி கையெழுத்து வாங்கி டாக்டர் பட்டம் கொடுத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். மேலும் இப்படி செய்தவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்
என்பதற்காக புகார் அளிக்க உள்ளதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் டாக்டர் பட்டம் வழங்கியதை நினைத்து பெருமையில் இருந்த வடிவேலுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நடித்த படம் தான் ஊத்திக்கிச்சு,
பட்டமும் போலியா என்று வடிவேலு புலம்பி வருகிறாராம். ஒரு காலத்தில் வடிவேலு ஓஹோ எ ன்று இருந்த காலத்தில் மற்றவர்களை மதிக்காமல் ஆணவத்துடன் இருந்ததால் தான் கர்மா மீண்டும் அவரை சுத்தி அடிக்கிறது என பலரும் கூறி வருகிறார்கள்.