பிரசாந்த்திடமும் நேருக்கு நேர் மோதி தோல்வியை சந்தித்த விஜய்..!! மண்ணைக் கவ்விய விஜயின் படம்..!! என்னனென படம்னு தெரியுமா..??

0

தற்போது   கோலிவுட்டில்   பாக்ஸ்   ஆபீஸ்   நாயகனாக   கலக்கிக்   கொண்டிருக்கும்   விஜய், சினிமாவில்   நுழைந்த   ஆரம்ப   காலகட்டத்தில்   பல   சருக்கல்களை   சந்தித்தார்.   ஏறத்தாழ 10 படங்களுக்கு    பிறகு   தான்   தனது   இடத்தை   தக்க   வைத்துக்   கொண்டார்.   அதிலும்   90களில் பிரசாந்த்துடன்   விஜய்   நேருக்கு   நேர்   மோதிய   3 படங்களில்   படுதோல்வியை   சந்தித்தார்.  விஜய்   இரண்டு   கதாநாயகிகளான  ரம்பா   மற்றும்   தேவயானி உடன்   இணைந்து   நடித்த   படம்   தான்   “நினைத்தேன் வந்தாய்”.   இந்தப்   படத்தில்   விஜய்   மற்றும்   ரம்பா   இருவரும்

காதலர்கள்.   ஆனால்   பெற்றோர்   விஜய்   மற்றும்   தேவயானி   இருவருக்கும்    நிச்சயம் செய்கின்றனர்.   கடைசியில்   தேவயானி   மற்றும்   ரம்பா   இருவரும்   சகோதரிகள்   என்பதால் அக்காவின்   வாழ்க்கைக்காக   காதலை   தியாகம்   செய்ய   துணிவார்.       இதுதான் படத்தின் கதை.  இந்த   படம்   ரிலீஸ்   ஆன   போது   தான்   பிரசாந்த்,   ஐஸ்வர்யா ராய்   இணைந்து   நடித்தஜீன்ஸ்   படமும்   ரிலீஸ்   ஆனது.   

ஜீன்ஸ்   படத்திற்கு   முன்   விஜய்யின்   நினைப்பில்   வந்தாய் படம்   தாக்குப்   பிடிக்க   முடியாமல்   படுதோல்வியை   சந்தித்தது.    ஜீன்ஸ்   படத்தில் இடம்  பெற்ற   பாடல்களும்   அல்டிமேட்   ஆக இருக்கும்.   அதிலும்   பிரசாந்த்   மற்றும்    ஐஸ்வர்யா இருவரும்   இரட்டை    வேடத்தில்   நடித்து   அசத்தியிருப்பார்கள்.   இந்தப் படம்   பாக்ஸ்    ஆபிஸில் வசூலை   தாறுமாறாக   குவித்தது   என்பது   குறிப்பிடத்தக்கது.

ஏ வெங்கடேஷ்    இயக்கத்தில்    வெளியான   நிலவே   வா   திரைப்படத்தில்   விஜய்,   சுவலட்சுமி, சங்கவி   இணைந்து   நடித்திருப்பார்கள்.   இதில்   விஜய்   சிலுவையாகவும்,   சுவலட்சுமி   சங்கீதா கேரக்டரில்  நடித்திருப்பார்கள்.  வெவ்வேறு  மதத்தை   சேர்ந்த   சிலுவை   மற்றும்   சங்கீதா இருவரும்  எப்படி  திருமணம்  செய்து   கொள்கிறார்கள்   என்பது   தான்  இந்த  படத்தின்   கதை. இந்த படத்திற்கு   எதிர்பார்த்த   அளவு   வெற்றி   கிடைக்கவில்லை.

நிலாவே   வா   திரைப்படம்   ரிலீஸ்   ஆன  அதே   நேரத்தில்   பிரசாந்த்  , சிம்ரன்   இணைந்து நடித்த   கண்ணெதிரே   தோன்றினாள்   திரைப்படமும்   வெளியானது.   நிலவே  வா   படம் போலவே   காதல்   கதைக்களத்தை   கொண்ட   படமாகவே   இருந்தாலும்,   இந்த   படத்தில் ரசிகர்கள்   விரும்பும்   சுவாரஸ்யம்   இருந்தால்   படம்   சூப்பர்   ஹிட்  ஆனது.

 

இவ்வாறு   90-களில்   வெற்றி   பெறுவதற்காக   விஜய்   திணறும்   சமயத்தில்  , பிரசாந்த் அடுத்தடுத்த   படங்களில்   நடித்து   ஹிட்   கொடுத்தார்.   அதிலும்   விஜய் டாப்   நடிகர்களான ரஜினி,   அஜித்   படங்களிடம்   மண்ணைக்     கவ்வியது     மட்டுமல்லாமல்   பிரசாந்த்திடமும் நேருக்கு   நேர்   மோதி   தோல்வியை   சந்தித்தார்.

Leave A Reply

Your email address will not be published.