April 14, 2024

விஜய் அஜித் உடன் ஹிட் படத்தில் நடித்த காமெடி நடிகர்..?? 8 வருடங்களாக சினிமா பக்கம் எட்டி கூட பாக்கல..?? 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவரா..!! என்ன காரணம்னு தெரியுமா..??

சினிமாவில்  மிமிக்கிரி   ஆர்டிஸ்டாக   தனது   திரை   பயணத்தை   தொடங்கிய   காமெடி   நடிகர் ஒருவர்,   தற்பொழுது   சினிமாவே   வேண்டாம்   என   ஒதுங்கியுள்ளார்.   ஒரு   காலத்தில்   காமெடி நட்சத்திரங்களில்   ஒருவராக   திகழ்ந்து   வந்தார்.   இந்நிலையில்   இவர்   கடந்த   எட்டு வருடங்களுக்கு   மேலாக   தமிழ்   சினிமாவிற்கு  முழுக்கு   போட்டுள்ளார்.   அதிலும் குணசித்திரம்   மற்றும்   காமெடி   கதாபாத்திரத்தில்   டாப்    ஹீரோக்களின்   படங்களில் நடித்ததன்   மூலம்   தனக்கென   தனி   இடத்தை   பிடித்துள்ளார்.

இதனைத்   தொடர்ந்து   தளபதி விஜய்   உடன்   சூப்பர்   ஹிட்   படத்தில்   நடித்ததன்   மூலம்   மிகவும்   பிரபலமானார்.    இதுவரை இவர்   நடிப்பில்   ஏறத்தாழ   100   படங்களுக்கு   மேல்     நகைச்சுவை   ரோலில்   நடித்து பட்டையை    கிளப்பியுள்ளார்.  மேலும்   இயக்குனர்   கே பாலசந்தர்   இயக்கத்தில்   வெளியான வானமே   எல்லை   என்ற   திரைப்படத்தின்   மூலம்

அறிமுகமானவர்   தான்   நடிகர்   தாமு. இதனைத்   தொடர்ந்து   பல்வேறு   படங்களில்   திறமையின்   மூலம்   தனது   அசாத்திய திறமையை   வெளிப்படுத்தியுள்ளார்.   அதிலும்   விஜய்   உடன்   கில்லி   படத்தில்   ஓட்டேரி   நரி என்னும்   ரோலில்   நடித்ததன்   மூலம்   பட்டி   தொட்டி    எங்கும்    பிரபலமானார்.  இந்நிலையில்   இவர்   நடிப்பில்   வெளிவந்த   அமர்க்களம்,

துள்ளாத   மனமும்   துள்ளும்,   பாட்ஷா,   ஜெமினி  போன்ற   திரைப்படங்கள்   இவரின்   திரை பயணத்திற்கு   அடிகல்லாக   அமைந்த    படங்கள்   என்றே   சொல்லலாம்.   அந்த   அளவிற்கு ஒவ்வொரு   கதாபாத்திரத்திலும்   அடித்து   தூள்   கிளப்பி  இருப்பார்.  இதனைத்    தொடர்ந்து கடைசியாக   2014   ஆம்   ஆண்டு   வெளியான   ஈர   வெயில்   என்னும்   படத்தில்  நடித்துள்ளார்.

 

அதன்    பிறகு     எந்தப்     படத்திலும்   நடிக்காமல்    இருந்து    வந்த   இவர்    கல்வித்துறையில் முக்கிய   பங்காற்றி    வருகிறார்.   தற்பொழுது   திரைப்பட    துறையைத்    தாண்டி   தனது பேச்சாற்றலின்   மூலம்   மாணவர்களுக்கு   உத்வேகத்தை   கொடுத்து    வருகிறார்.   மேலும் கடந்த 10    ஆண்டுகளாக    கல்வித்துறையில்   சேவையாற்றி   தனது

பங்களிப்பை    கொடுத்துள்ளார்.    இதற்காக   நடிகர்    தாமுவிற்கு    தேசிய   கல்வி   வளர்ச்சி மற்றும்   ஆராய்ச்சி   மையம்   சார்பில்   தேசிய   கல்வியாளருக்கான   கௌரவ   விருது வழங்கப்பட்டது.     அதுமட்டுமல்லாமல்   மறைந்த   ஏ பி ஜே   அப்துல்கலாம்   அவர்களிடம் உதவியாளராக    பணியாற்றியுள்ளார்   என்பது    குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *