இந்த விஷயத்தில் மட்டும் நல்லவராக நடந்து கொண்ட ரஜினி..?? விஜய் ,அஜித் தயவு செஞ்சு ரஜினிய பாத்து இத கத்துக்கணும்..?? அதிலிருந்து பின்வாங்க மாட்டாங்களா ..??

0

டாப்   நடிகர்களின்   சம்பளத்தை   கேட்டால்   தலை   சுற்றுகிறது.   அதாவது   படத்தின் பட்ஜெட்டும்   ஹீரோவின்   சம்பளமும்   ஒரே   மாதிரியாக   உள்ளது.   விஜய்,   அஜித்,   ரஜினி போன்ற   நடிகர்கள்   ஒரு   படத்திற்கு   100 கோடிக்கு   அதிகமாக   சம்பளம்   வாங்கி வருகிறார்கள்.   இதைப்   பார்த்து   அடுத்த   தலைமுறை   நடிகர்களும்   சம்பளம்   அதிகமாக கேட்டு   வருகிறார்கள்.

ஆனாலும்   சம்பள    விஷயத்தில்    ரஜினி   பெரிய    மனுஷன்   ஆக   நடந்து   கொண்டுள்ளார். அதாவது   டாப்    ஹீரோக்கள்   ஒரு   படத்தில்   100 கோடி   சம்பளம்   வாங்கி   விட்டால் அதிலிருந்து   பின்வாங்க   மாட்டார்கள்.   அடுத்தடுத்த    படத்திற்கு    அதிகமாக   தான்   சம்பளம் எதிர்பார்ப்பார்கள்.   அப்படிதான்   தில் ராஜு   விஜய்க்கு   அதிக   சம்பளம்   கொடுத்து

தெலுங்கு   பக்கம்   இழுத்தார்.   இந்நிலையில்   ரஜினி   நடிப்பில்   வெளியான   அண்ணாத்த படத்தில்   100 கோடி   சம்பளமாக    சூப்பர்   ஸ்டார்    வாங்கியிருந்தார்.   ஆனால்    இப்படம் கலவையான   விமர்சனங்களை   பெற்று   தோல்வியடைந்தது.   இப்போது   நெல்சன் இயக்கத்தில்   சன்   பிக்சர்ஸ்   தயாரிப்பில்

ஜெயிலர்   படத்தில்   ரஜினி   நடித்து   வருகிறார்.   அண்ணாத்த   படம்   தோல்வியடைந்ததால் ரஜினி   இந்த   படத்திற்கு   8 0   கோடி   சம்பளம்   போதும்   என்று   வாங்கிக்    கொண்டாராம். அதுமட்டுமின்றி   ஜெயிலர்   படம்   வெற்றி   பெறும்   என்ற   நம்பிக்கை   உள்ளது.   ஒருவேளை ஜெயிலர்   படம்   தோல்வி   அடைந்தால்

ரஜினியின்   அடுத்த   படத்திலும்   சம்பளத்தை   குறைத்துக்  கொள்வேன்   என்று   உறுதியளித்து உள்ளாராம்.  மேலும்   படம்   வெற்றி   அடைந்தால்   தன்னுடைய   சம்பளத்தை   105    கோடி என நிர்ணயித்துக்   கொள்வேன்   என்று   சூப்பர்   ஸ்டார்   கூறியுள்ளார்.  ரஜினி,   தயாரிப்பாளர்களின்   நலன்   கருதி   தன்னுடைய    வெற்றி,

தோல்வி     படங்களை   கணக்கிட்டு   அடுத்த   படத்தின்   சம்பளத்தை   வாங்கிக்   கொள்கிறார். இதேபோல்   அஜித்,   விஜய்   போன்ற   நடிகர்களும்   முந்தைய   படங்களின்   வெற்றி   தோல்வியை  பார்த்து   சம்பளத்தை   நிர்ணயித்தால்   நன்றாக   இருக்கும்  என தயாரிப் பாளர்கள்   வேண்டுகோள்   வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.