அஜித்துடன் ஜோடி போட்டு நடித்த நடிகைக்கு சீரியல் தான் வாய்ப்பு ..?? ரிவெஞ் எடுக்கும் 5 நடிகைகள் ..?? அட இந்த நடிகையுமா..!!
அஜித்துடன் ஜோடி போட்டு ஒரு ப டத்திலாவது நடித்து விட வேண்டும் என நடிகைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் அவருக்கு ஜோடி போட்டு நடித்த நடிகைகள் தற்போது சீரியலில் நடித்து வருகிறார்கள் அஜித்தின் காதல் கோட்டை, நீ வருவாய் என, தொடரும், கல்லூரி வாசல் போன்ற படங்களில் தேவயானி நடித்துள்ளார். அதிலும் காதல் கோட்டை படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
தேவயானி சினிமாவில் மார்க்கெட் இழந்தவுடன் சீரியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி அவர் நடித்த கோலங்கள் மிகப்பெரிய ஹிட் சீரியல் ஆக இருந்தது. அ தன் பின்பு சில தொடர்களில் நடித்து வந்ததேவயானி புதுப்புது அர்த்தங்கள் என்ற ஜீ தமிழ் தொடரில் நடித்து வந்தார்.
விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் கீர்த்தனா. இவர் அஜித்தின் மைனர் மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சீரியலில் வந்த கீர்த்தனா கோலங்கள், அக்னி நட்சத்திரம், ரோஜா, திருமதி ஹிட்லர் போன்ற தொடர்களில் நடித்து இருந்தார்.
அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான வாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சிம்ரன். மேலும் அவள் வருவாளா, உன்னை கொடு என்னை தருவேன் போன்ற படங்களிலும் அஜித்துடன் இணைந்து சிம்ரன் நடித்து இப்போது படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிம்ரன் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அஜித்தின் ராஜாவின் பார்வையிலே, பாசமலர்கள் போன்ற படத்தில் காயத்ரி சாஸ்திரி நடித்திருந்தார். ஆனால் வெள்ளித்திரை இவருக்கு கை கொடுக்காத நிலையில் சின்னத் திரையில் கால் பதித்தார். அதன்படி மெட்டி ஒலி தொடரில் சரோ கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாது. சமீபத்தில் ரோஜா தொடரில் கல்பனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
அஜித் நடிப்பில் பட்டையை கிளப்பிய படம் என்றால் வரலாறு. இந்த படத்தில் தான் நடித்த மூன்று கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி இருந்தார். இப்படத்தில் கனிகா அஜித்துக்கு ஜோடியாகவும், மற்றொரு அஜித்துக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். பல திறமைகளை உள்ளடக்கிய கனிகா தற்போது எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி வருகிறார்.