எம்ஜிஆர் மிஞ்சிய நடிப்பு..!! தனுஷ் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான நடிப்பில் இதுவரை தேசிய விருதுகளை தட்டித் தூக்கியிருக்கிறார்..!! 5 நடிகர்கள் லிஸ்ட் ல ப்ர்ஸ்ட் தனுஷ் தான்..!! என்ன படம்னு தெரியுமா..??
எம்ஜிஆர் 1971 ஆம் ஆண்டு எம் கிருஷ்ணன் இயக்கத்தில் ரிக்ஷாக்காரன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் எம்ஜிஆர், பத்மினி மற்றும் மஞ்சுளா ஆகியோர் நடித்தார்கள். இத்திரைப்படம் ஒரு ரிக்ஷாகாரனை மையமாக வைத்து அதன் பின்னணியில் இருக்கும் மர்மத்தை வெளிகொண்டு வரும் வகையில் அமைந்திருக்கும். இப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வணிக ரீ தியாக வெற்றி பெற்றது. இந்தியாவிலேயே முதன் முதலாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தட்டி சென்ற பெருமை இவரை சேரும்.
பாலா இயக்கத்தில் பிதாமகன் இதில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் நடித்தி ருந்தார்கள். இப்படத்தில் விக்ரம் வெட்டியான் என்ற கதாபாத்திரத்தில் அமைதியாக இருந்து திறமையாக நடிப்பை வெளிக்காட்டி சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பெற்றிருப்பார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சேவல் சண்டை ஜாக்கியாக இவரது கதாபாத்திரத்தை அழகாக நடித்திருப்பார். இதற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அசுரன் திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது கிடைத்தது. இவர் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு சூரரைப் போற்று திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. இப்படத்திற்காக சூர்யாவிற்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது கிடைத்தது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி ,ஃபஹத் பாசில், சமந்தா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கிறார். இதற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது விஜய் சேதுபதி பெற்றிருப்பார்.