சூர்யாவின் சிங்கம் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..?? உலகளவில் இத்தனை கோடியா வசூல் செய்ததது..!! வாயைபிளந்த ரசிகர்கள்..!!
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். சூர்யா என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் முதலில் நேருக்கு நேர் , நந்தா , காக்க காக்க , பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம் , ஏழாம் அறிவு , 24 போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.
இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிங்கம். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், ராதாரவி, விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையும் படைத்தது.
2010ம் ஆண்டில் வெளிவந்த இப்படம் சுமார் ரூ. 83 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்ததது. சிங்கம் படத்திலிருந்து தான் சூர்யாவிற்கு மாபெரும் வசூல் செய்யும் படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.