நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி இவங்க தான்..?? இந்நிலையில் நடிகை அதிதி ராவ்வுடன் காதலில் சிக்கிய சாக்லெட் பாய் சித்தார்த் ..!! சமூக வலைதளங்களில் வலம் வரும் முதல் மனைவி புகைப்படம் உள்ளே..!!
சித்தார்த் என அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயண் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.
கன்னத்தில் முத்தமிட்டால் ஆய்த எழுத்து, பாய்ஸ், காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு ,காவியத் தலைவன் எனஇவர் 20 படங்களுக்கு மேல் நடிகராகவும் 15 படங்களுக்கு மேல் பாடகராகவும் உள்ளார். தமிழ் சினிமாவில்
எத்தனையோ சாக்லெட் பாய் நடிகர்கள் இருக்காங்க, அதுல ஒருவர் தான் சித்தார்த். ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்த இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மற்ற மொழிகளில் இவர் கண்ட பெரிய வெற்றி
தமிழில் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இப்போது நடிகை அதிதி ராவ்வுடன் காதலில் சிக்கியிருக்கிறார் , இந்த நிலையில் தான் சித்தார்த்தின் முதல் மனைவி புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.