April 17, 2024

அப்ப புரியல, இப்ப புரியுது..!! தளபதி 67 யில் செய்யப்போகும் சம்பவம்..?? ரத்தம் தெறிக்க வெளிவந்த போஸ்டரில் இருக்கும் ரகசியம்..!!

எப்போதுமே   பரபரப்பாக   இருக்கும்   சோசியல்  மீடியா   இன்று  இன்னும்   அதிக   பரபரப்புடன் காணப்படுகிறது.   இதற்கு   முக்கிய   காரணம்   தளபதி   67   பற்றி   வரும்   அடுத்தடுத்த அப்டேட்டுகள்   தான்.   லோகேஷ்   கனகராஜ்   இயக்கத்தில்   விஜய்   நடிக்கும்   இந்த   படம் குறித்த   பல   அப்டேட்டுகள்   கடந்த   சில   தினங்களாகவே   வெளிவந்து கொண்டிருக்கிறது.  படப் பிடிப்புக்காக   காஷ்மீர்   செல்லும்   படகுழு   விமானத்தில்   இருக்கும்   படியான வீடியோவை   தயாரிப்பு   தரப்பு   வெளியிட்டுள்ளது.

அதில்   விஜய்,   த்ரிஷா   உட்பட   பலரும்   இருக்கின்றனர்.   இதை  அடுத்து   இன்று   மாலை 5 மணிக்கு   படத்தின்   டைட்டில்   பற்றிய   ப்ரோமோ   வீடியோ   வெளிவர  இருக்கிறது.   நேற்று  இது  குறித்து   அதிகாரபூர்வமாக   அறிவித்த   பட   குழு   ஒரு   போஸ்டரையும்   வெளியிட்டு இருந்தது.   அதில்   விஜய்யின்   புகைப்படம்   முழுவதும்   ரத்தம்   தெறிக்கும்   அளவுக்கு   இருந்தது.

இதுவே   பட   தலைப்பு   பற்றிய   ஒரு   மறைமுக   குறிப்பாகவும்   நமக்கு  தோன்றியது.  அந்த வகையில்   தற்போது   படத்தின்   தலைப்பு   பற்றிய   ஒரு   தகவல்   மீடியாவில்   வேகமாக   பரவி வருகிறது.   அதாவது   குருதிப்புனல்   என்ற   தலைப்பை   தான்   லோகேஷ்   தேர்ந்தெடுத்து ள்ளாராம்.   இதற்கு   பின்னால்   பல   காரணங்களும்   இருக்கிறது.

கமல்   நடித்த  படங்களிலேயே   அவருக்கு   மிகவும்   பிடித்த   படம்   தான்   இந்த    குருதிப்புனல். கடந்த   1995   ஆம்   ஆண்டு   கமல்,   அர்ஜுன்,   நாசர்   உள்ளிட்ட   பலர்   நடிப்பில்   வெளிவந்த இந்த   திரைப்படம்   இன்று   வரை   ரசிகர்களால்   ரசிக்கப்பட்டு   வருகிறது.  அப்படிப்   பட்ட   இந்த    படத்தின்   இரண்டாம்    பாகமாகவும்   தளபதி   67  இருக்கும்   என்று    கூறப்படுகிறது.

அதனால்   தான்   அர்ஜுனை   இ ந்த   படத்திற்கு   லோகேஷ்  தேர்ந்தெடுத்து   இருக்கிறார்.   அது மட்டுமல்லாமல்   கமலும்   இப்படத்தில்   ஒரு   கேமியோ   ரோலில்  வர   இ ருக்கிறார். . அதற்கேற்றார்   போல்   நேற்று   வெளியான   போஸ்டரும்   இருந்ததால்   ரசிகர்கள்   அப்ப   புரியல,   இப்ப   புரியுது   என்று   இந்த   தலைப்பை   ட்ரெண்ட்   செய்து   வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *