விஜய் சேதுபதி அதிக படங்களில் நடிப்பதற்கான முக்கிய காரணமே இதுதான்..?? இவரைப் போய் தப்பா நினைச்சுட்டோமே..!! வில்லனா நடிச்சாலும் ஹீரோ தான்..!!
பொதுவாக நடிகர், நடிகைகள் தங்களது மார்க்கெட் உள்ள போதே அதிக படங்களில் நடித்து பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல் தான் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்து இப்போது மாஸ் ஹீரோவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் கிடைக்கும் கதாபாத்திரம் எல்லாமே விஜய் சேதுபதி ஏன் நடிக்கிறார், என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
இவரும் மற்ற நடிகர்கள் போல குறுகிய காலத்திலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார் என பலரும் பேசி உள்ளனர். ஏனென்றால் ஹீரோ அந்தஸ்து கிடைத்த பிறகு வில்லன், குணச் சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் தயங்குவார்கள். ஆனால் எந்த தயக்கம் இன்றி விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இதைப் பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது நானும் ரவுடிதான் படத்தின் கதையில் நடிக்க எந்த நடிகர்களும் சம்மதிக்க வில்லையாம். ஏனென்றால் அதில் ஹீரோவுக்கு பெரிய அளவில் ஆக்சன் காட்சிகள் இல்லை. அது மட்டு மின்றி வில்லன்கள் ஒருவருக் கொருவர் குத்தி இறந்து விடுவார்கள்.
அதுவும் ஹீரோ ஒரு பயந்த சுபாவம் உடையவராக நடிக்க வேண்டும். ஆகையால் மற்ற நடிகர்கள் நிராகரித்த பின்பு விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி யிடம் சென்றுள்ளார். அவரும் இது என்னடா கதை, இதுல எனக்கு ஒண்ணுமே இல்லை என்று விஜய் சேதுபதி இடம் கேட்டுள்ளார். ஆனாலும் நான் கால்ஷீட் கொடுத்தால் உனக்கு படம் ஓடும்னா தரேன் என்று ச ம்மதித்துள்ளார். ஏனென்றால் ஆரம்பத்தில்
சினிமா வாய்ப்புக்காக விஜய் சேதுபதி நிறைய கஷ்டபட்டுள்ளார். ஆகையால் தான் பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் படக்கூடாது என்பதற்காக வரும் பட வாய்ப்பு எல்லாமே ஒற்றுக்கொண்டு அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வரும்படி செய்து வருகிறார். இதனால் தான் விஜய் சேதுபதி வருஷத்திற்கு ஏழு, எட்டு படங்களில் நடிக்கிறார்.