இந்தியன் 2 சூட்டிங் ஸ்பாட்டுக்கு ஹெலிகாப்டரில் வந்த கெத்தாக வந்த நடிகர்..!! இயக்குனரே மிரண்டு போயிடாரா..!! நீங்களும் பாருங்க..!!
உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு சினிமாவில் படுஜோராக செயல்பட்டு வருகிறார். ஒரு பக்கம் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் டாப் நடிகர்களின் படங்களை தயாரிக்க வேலை செய்து வருகிறார். மற்றொரு பக்கம் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசனின் சேனாதிபதி கெட்டப் உள்ள புகைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் லைக்கா தயாரிக்கும் இந்த படத்தை உதயநிதி வெளியிட உள்ளார். இந்தியன் 2 படத்தை இந்த ஆண்டு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. திருப்பதியில் பிரமாண்ட செட் போடப்பட்டு இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்ற வருகிறது.
இதற்காக கமல் தனி ஹெலிகாப்டர் மூலம் இந்தியன் 2 படப்பிடிப்பில் வந்து கலந்து கொண்டு செல்கிறாராம். ஆகையால் கமல் ஹெலிகாப்டர் முன் நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி சேனாதிபதி ரிட்டன்ஸ் என்ற ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக் கிறார்கள். மேலும் இந்தியன் 2 படத்தைப் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இப்படத்தை முடித்த கையோடு கமல் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.