சொந்த ஊர் கோவிலில் அசிங்கப்பட்ட அமலாபால்..?? நம்ம ஊர் பழனில அமலாபாலுக்கு கிடைத்த ராஜ மரியாதை.?? வைரலாகும் வீடியோ உள்ளே.!!
மலையாள நடிகையான அமலாபால் தமிழில் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி போன்ற வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சய மானார். இவர் தற்போது தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் ஹிந்தி, மலையாளம் போன்ற பிற படங்களில் நடித்து வருகிறார் . இன்னிலையில் அமலா பால் கடந்த வாரம் கேரளாவில் இருக்கும் கோயிலில் அசிங்கப்பட்டது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் இப்போது அமலாபால், தமிழ்நாட்டில் பழனி கோயிலில் ராஜ மரியாதையுடன் நடத்தப்பட்டதால் மெய் சிலிர்த்திருக்கிறார். அமலா பால் தனது சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருவைராணிக்குளம் இந்து கோயிலுக்குள் நுழையும் பொழுது, அங்கிருந்து கோவில் ஊழியர்கள் அவரை கோயிலில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்கள்.
அவர் கிறிஸ்துமரத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த கோயிலில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கும் நடைமுறை இருப்பதாகவும் அவரை வெளியேற்றினார்கள். இந்து மத பாகுபாடு மாற வேண்டும் என்று அந்த கோவில் பதிவேட்டில் அமலாபால் எழுதி வைத்தார். தற்போது பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்ற
அமலா பால் அங்கு ராஜ மரியாதையுடன் சாமி கும்பிட்டு விட்டு தனது அம்மாவிடம் மகிழ்ச்சியாக இருந்தார். அப்போது எனது சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும் பல பாகுபாடுகள் இன்னும் அங்கு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார்கள்
எனக்கு தமிழ்நாடு தான் முக்கியம். தமிழர்கள்தான் அனைவரையும் மதிக்கும் குணம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்று, சொந்த ஊரில் அசிங்கப்பட்ட அமலாபால் தமிழகத்தில் பழனி கோயிலில் கொடுத்த ராஜ மரியாதையை பார்த்து பூரிப்படைந்துள்ளார்.