விஜய் சேதுபதி கூடவே வைத்திருக்கும் இரு பெண்கள்..!! எதுக்கு தெரியுமா..?? அவருக்கு அத கத்து கொடுக்கத்தான்..!! கதைய கூட அவங்க தான் ஓகே சொல்லுவாங்கலாமா..!!
விஜய் சேதுபதி என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர் , தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று , பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , நானும் ரௌடி தான் , சேதுபதி , 96 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல மாக அறியப்படும் நடிகர் ஆவார்.
மக்கள் செல்வன் என தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வருகிற 3ம் தேதி மைக்கேல் எனும் படம் வெளிவரவுள்ளது. விஜய் சேதுபதியின் கைவசம் பல படங்கள் உள்ளதை தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களுக்கு எதிர்பார்க்காத ஷாக் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், நடிகர் விஜய் சேதுபதி கதை கேட்கும் பொழுது தன் பக்கத்தில் இரு பெண்களை
வைத்துக்கொண்டு தான் கதை கேட்கிறாராம். கதை கூறும் இயக்குனர்களிடம் அந்த இரு பெண்களை பார்த்து கதை கூறுங்கள் என்று தான் விஜய் சேதுபதி சொல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த இரு பெண்களும் விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லித்தரும் பயிற்சியாளர்களாம். அதனால் தான் அவர்கள் இருவரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே கதை கேட்டு வருகிறாராம் விஜய் சேதுபதி.