திமிரு காட்டிய தில் ராஜுவுக்கு சரியான பதிலடி அஜித் ..!!என்ன என்னநடந்தது தெரியுமா..?? ஒரே கல்லுல ரெண்டு மாங்கா ..!! கொண்டாடத்தில் ரசிகர்கள்..!!
பொங்கல் பண்டிகை முன்னிட்டு அஜித்தின் துணிவு தி ரைப்படம் உலகெங்கும் ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதில் முதல் முதலாக அஜித் மற்று ம் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சுவாரியர் இணைந்து நடித்திருக்கின்றனர். மேலும் 2018 ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம், அதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு வெளியான வலிமை போன்ற படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித்தின் துணிவு 200 கோடிக்கு மேல் உலக அளவில் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது .
9 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக்கொண்ட தல, தளபதி இருவரின் படங்களின் வசூல் பாதிக்கப்படும் என பலரும் கணித்தனர். அதுமட்டுமின்றி தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் நாயகன் விஜய் தான் அவருக்கு தான் அதிக ஸ்கிரீனிங் கொடுக்க வேண்டும் என திமிரு காட்டிய தில் ராஜுவுக்கு அஜித்தின் துணிவு சரியான பதிலடி கொடுத்தது
தமிழகத்தில் ஒரே வாரத்தில் 100 கோடியை துணிவு ஈட்டியது. ஆனால் வாரிசு 90 கோடியை மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தமிழகத்தில் எப்போதுமே அஜித் ரியல் ஆட்ட நாயகன் என்பதை காட்டுவதற்காகவே துணிவு திரைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதே போன்று உலக அளவில் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் துணிவு படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது .மேலும் பிரான்ஸ் நாட்டின் முன்னணி தொலைக்காட்சியில் அஜித்தின் துணிவு படம் ஃபிரென்ச் படங்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும்,
அங்கிருக்கும் திரையரங்குகளில் துணிவு படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து கொண்டிருப்பதாகவும் பேசி உள்ளனர். மேலும் இதுவரை வெளிநாடுகளில் துணிவு 65 கோடியை வசூல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்த முறை துணிவு உலகளவில் மாஸ் கட்டிக் கொண்டிருக்கிறது.
அது மட்டுமின்றி துணிவு இளசுகள் விரும்பு வகையில் அதிரடி ஆக்சன் படமாக எடுத்திருப்பது கூடுதல் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது . இதனால் ஃபேமிலி ஆடியன்ஸை மட்டுமே கவர்ந்த வாரிசு துணிவுக்கு முன்பு போட்டி போட முடியாமல் சற்று பின் தங்கிய நிலையே நீடிக்கிறது.